May 20, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்காரரை கொலை செய்ய முயற்சி
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரரை கொலை செய்ய முயற்சி

Share:

போலீஸ்காரர் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக லோரி உதவியாளர் ஒருவர் தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பாட்டார்.

28 வயது முஹமாட் ஹஃபிஸ் நஹாருடின் என்ற அந்த லோரி உதவியாளர்,பெரோடுவா மைவி காரை மிக அபாயகரமாக செலுத்தி, கோப்பரல் அந்தஸ்தை கொண்ட நிக் முஹமாட் கைருல் இஸ்வான் நிக் ஜிட் என்ற போலீஸ்காரரை மோதித் தள்ளியதில் அவர் கடும் காயங்களுக்கு ஆளானதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த லோரி உதவியாளரின் செயல், போலீஸ்காரருக்கு மரணத்தை விளைவிக்கும் நோக்கில் அமைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்நபர், கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் சென்டெரோங் பாலாய்,மஸ்ஜிட் சிம்பாங் 4 லாபு குபோங் என்ற இடத்தில் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News