May 5, 2026
Thisaigal NewsYouTube
ரொட்டி செனாய், பானத்திற்கு 120 வெள்ளி கட்டணம்  வசூலித்தது ஏன்? -  சிரம்பான் உணவகத்திற்கு அமைச்சு நோட்டீஸ்
தற்போதைய செய்திகள்

ரொட்டி செனாய், பானத்திற்கு 120 வெள்ளி கட்டணம் வசூலித்தது ஏன்? - சிரம்பான் உணவகத்திற்கு அமைச்சு நோட்டீஸ்

Share:

சிரம்பான், பிப்ரவரி.18-

சிரம்பானில் வாடிக்கையாளர் ஒருவருக்கு அதிகளவில் கட்டணம் வசூலித்த உணவகம் ஒன்றிற்கு, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வாடிக்கையாளர் ஒருவர் தனது சகாக்களுடன் இணைந்து இரவு உணவிற்காக ரொட்டி செனாயும், பானங்களும் அருந்திய நிலையில், சம்பந்தப்பட்ட உணவகமானது அவருக்கு 120 வெள்ளி கட்டணம் விதித்துள்ளது.

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், 70 வெள்ளி மட்டுமே விலையுடைய அந்த உணவுகளுக்கு, 120 வெள்ளி கட்டணம் விதித்த உணவகத்திற்கு எதிராக அமைச்சில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், 4 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட உணவகமானது அதிக கட்டணம் வசூலித்தது குறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் நெகிரி செம்பிலான் மாநில இயக்குநர் ஸாஹிர் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

Related News