Jul 21, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு இந்தோனேசிய நாடாளுமன்றம் ஒப்புதல்
தற்போதைய செய்திகள்

மலேசியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு இந்தோனேசிய நாடாளுமன்றம் ஒப்புதல்

Share:

மலேசியா மற்றும் துருக்கியுடன் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களுக்கு இந்தோனேசிய நாடாளுமன்றம், இன்று செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதன் மூலம் பாதுகாப்புத் தொழில்நுட்பம், கூட்டுப் ராணுவப் பயிற்சி மற்றும் பிராந்திய பாதுகாப்பில் இருநாடுகளுடனும் ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறவுள்ளது.

இது குறித்து இந்தோனேசிய சட்டத்துறை அமைச்சர் சூப்ரத்மான் ஆண்டி அக்தாஸ் கூறுகையில், அனைத்துலக சட்டம் மற்றும் உள்நாட்டு சட்டங்களுக்கு இணங்க இந்த ஒப்பந்தங்களை அமல்படுத்த நாடாளுமன்ற ஒப்புதல் அவசியம் என தெரிவித்துள்ளார்.

மேலும், மலேசியாவுடனான ஒப்பந்தம் கடந்த 2022-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 9-ஆம் தேதி, கோலாலம்பூரில் கையெழுத்திடப்பட்டதாகவும், துருக்கியுடனான ஒப்பந்தம் அதே ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி Bali-யில் கையெழுத்திடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News