தனது மனைவியை தீயிட்டு கொன்றதாக இந்திய ஆடவர் ஒருவர் பேரா, மஞ்சோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
எஸ்.கேப்ரியல் என்ற 28 வயதுடைய அந்த ஆடவர், கடந்த ஜுலை 10 ஆம் தேதி மஞ்சோங், சித்தியவான், Walbrook (வால்புரூக் ) தோட்டத்தில் 33 வயதுடைய இ. கோமதி என்ற தமது மனைவிக்கு தீயிட்டு மரணம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
மாஜிஸ்திரேட் தி.கவித்தா முன்னிலையில் நிறுத்தப்பட்ட கேப்ரியலிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வழக்கு ஈப்போ உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது.
கேளிக்கை மையம் ஒன்றில் பாதுகாவல் பணியான பொன்ஸர் வேலையை செய்து வந்ததாக கூறப்படும் கேப்ரியல்,குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டமை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது


