புகிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் முன்னாள் உதவி இயக்குநரும், பேராக் மாநில முன்னாள் போலீஸ் தலைவருமான டத்தோ மியர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட், இன்று வெள்ளிக்கிழமை மலாயா உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
மலேசிய போலீஸ் துறையில் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றிய, ஓய்வு பெற்ற 61 வயதுடைய மியோர் ஃபரிடலாத்ராஷ்சின் வழக்கறிஞர் நியமனம், ஈப்போ உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அப்துல் வஹாப் முகமது முன்னிலையில் நடைபெற்றது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை பேராக் மாநில போலீஸ் தலைவராக பதவி வகித்த அவர், தற்போது டெதுவான் பத்ருல், சமத், ஃபைக் & கோ என்ற வழக்கறிஞர் நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார்.
போலீஸ் துறையில் பணியாற்றிய காலக்கட்டத்தில், மியோர் ஃபரிடலாத்ராஷ் மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை மேற்கொண்டு, சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னார், மலேசிய தேசிய பல்கலைகழகத்தில் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


