Apr 8, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் அரசு பணியாளர்களுக்கு ‘வீட்டிலிருந்தே பணிபுரியும்’ முறை அமல்
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் அரசு பணியாளர்களுக்கு ‘வீட்டிலிருந்தே பணிபுரியும்’ முறை அமல்

Share:

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, நெகிரி செம்பிலான் மாநில அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் BDR திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.

இன்று நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண், அலுவலகத்திலிருந்து 8 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் வசிக்கும் சுமார் 3,000 அரசு ஊழியர்கள் இந்தச் சலுகையைப் பெறலாம் எனத் தெரிவித்தார்.

செவ்வாய், புதன் அல்லது வியாழன் ஆகிய நாட்களில் இரண்டு நாட்களை இதற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு நேரில் வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம், நிதி மற்றும் மனித வளம் சார்ந்த துறைகளுக்கு இச்சலுகை வழங்கப்பட்டாலும், பொறியாளர்கள் மற்றும் அமலாக்க அதிகாரிகள் போன்ற களப்பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும். அதேநேரம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு இத்திட்டம் பொருந்தாது என்று மந்திரி பெசார் தெளிவுபடுத்தினார்.

உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் மந்திரி பெசார் எச்சரித்துள்ளார்.

Related News