Terengganu, Kampung Amer - ரில் UiTM பல்கலைக்கழக மாணவி ஒருவர் ஓட்டிச் சென்ற கார் நீரில் மூழ்கியதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இன்று காலை 11.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் Arau, Perlis - சில் உள்ள UiTM பல்கலைக்கழகத்தில் பயிலும் அந்த 21 வயது Nur Fatnin Insyirah Mohd Nazri என்ற அந்த மாணவி அப்பகுதி குடியிருப்பாளர்கள் மற்றும் தீயணைப்பு, மீட்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக Besut மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Abdul Rozak Muhammad தெரிவித்தார்.
Kuala Terengganu - விலிருந்து Kota Bharu - விற்கு தனது நண்பரை அழைத்து வருவதற்காக சென்றுக் கொண்டிருந்த வேளை, இச்சம்பவம் நிகழ்ந்ததாக Abdul Rozak குறிப்பிட்டார்.
அம்மாணவி ஓட்டி சென்ற Perodua Myvi ரக கார் சட்டென்று சறுக்கி அருகிலிருந்த ஆற்றினுள் புகுந்ததாக அவர் மேலும் விளக்கமளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட அம்மாணவியை Besut மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக Abdul Rozak குறிப்பிட்டார்.








