Dec 4, 2025
Thisaigal NewsYouTube
வட்டி முதலியாக செயல்பட்ட நபர் கைது
தற்போதைய செய்திகள்

வட்டி முதலியாக செயல்பட்ட நபர் கைது

Share:

அஹ் லோங் எனப்படும் லைசென்ஸின்றி வட்டி முதலையாக செயல்பட்டு வந்த அந்நிய நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த புதன்கிழமை பினாங்கு, பாயான் பாருவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 27 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டதாக பினாங்கு, பாராட் டாயா மாவட்ட போலீஸ் நிலையம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுற்றுப்பயண விசாவை பயன்படுத்தி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பாயான் லெப்பாஸ் தொழில்பேட்டையில் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்த அந்த நபர், பாயான் லெப்பாஸில் தொழிற்சாலையில் வேலை செய்கின்ற பணியாளர்களை இலக்காக கொண்டு வட்டித் தொழில் செய்து வந்தது தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Related News