இன்று காலை மறைந்த, கல்வி அமைச்சர் Fadhlina Sidek - கின் தாயாரான Datin Dr Siti Zalikhah Md Nor - ரை பிரதமர் Dato Sri Anwar Ibrahim நேரில் சென்று சந்தித்து தமது இறுதி மரியாதையை செலுத்தினார்.
அவ்விடத்தில் பிரதமர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக Fadhlina Sidek - கின் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட்டதுடன் மறைந்த Siti Zalikhah இறுதி சடங்கிலும் கலந்து கொண்டார்.
மேலும், சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad - டும் இதில் கலந்து கொண்டு Fadhila Sidek - விற்கும் அவரின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
முன்னதாக, தமது தாயாரான காலஞ்சென்ற Siti Zalikhah, அவரின் 75 ஆவது வயதில் இன்று காலை 9.30 மணியளவில் Serdang மருத்துவமனையில் காலமானார் என்ற தகவலை முகநூல் அகப்பக்கத்தின் வாயிலாக Fadhlina Sidek அறிவித்திருந்தார்.








