கோல லங்காட், அக்டோபர்.16-
கோல லங்காட், தெலுக் பங்ளிமா காராங்கில் நேற்று வீசிய புயலில் வீடுகளின் கூரைகள் பறந்த நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவித் திட்டங்கள் நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் நாளை விவாதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். அதே வேளையில் பள்ளிகளில் அதிகரித்து வரும் சளிகாய்ச்சால் தொற்று விவகாரம் குறித்தும் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.