Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அது பிரதமருக்கு அளிக்கப்படும் பரிசாகும்
தற்போதைய செய்திகள்

அது பிரதமருக்கு அளிக்கப்படும் பரிசாகும்

Share:

சுங்கை பக்கப் , ஜூலை 04-

நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறவிருக்கு பினாங்கு, சுங்கை பக்கப் சட்டமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜோஹ்ரி அரிபின்- வெற்றி பெறுவாரோயானல், அந்த வெற்றியானது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அளிக்கப்படும் பரிசாகும் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் சுங்கை பக்கப் தொகுதியை பக்காத்தான் ஹராப்பானிடமிருந்து பாஸ் கட்சி கைப்பற்றினாலும், அந்த தொகுதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், பிறந்து வளர்ந்த சொந்த ஊராகும். இறைவன் அருளில் அத்தொகுதியில் ஒற்றுமை அரசாங்கத்தின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜோஹ்ரி அரிபின் - வெற்றி பெறுவாரேயானால் அந்த வெற்றி, பிரதமருக்கு அர்ப்பணிக்கப்படும் வெற்றி கனியாக கருதப்படும் என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

நேற்று சுங்கைப் பாக்காப் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு ஆதரவாக முழு வீச்சில் பிரச்சாரம் மேற்கொண்ட துணைப்பிரதமரான அகமட் ஜாஹிட், வாக்காளர்கள் முன்னிலையில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்