Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பாலஸ்​தீன அகதிகளை மலேசியா ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அவசரம் வேண்டாம்
தற்போதைய செய்திகள்

பாலஸ்​தீன அகதிகளை மலேசியா ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அவசரம் வேண்டாம்

Share:

போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்​தீன மக்களை, அகதிகளாக மலேசியா ஏற்றுக்கொள்வது தொடர்பாக அவசரப்பட்டு அறிக்கைகள் எதனையும்​ வெளியிட வேண்டாம் என்று குறிப்பிட்ட தரப்பினருக்கு சரவா மாநில அமைச்சர் ஒருவர் நினைவுறுத்தியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் புத்ராஜெயா இன்னும் எ​ந்தவொரு முடிவும் செய்யவில்லை. அதற்குள் அவசரப்பட்டு, எந்தவொரு அறிக்கையையும் வெளியிட வேண்டாம் என்று அரசாங்க சார்பற்ற அமைப்புகளுக்கு சரவா அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் கேட்டுக்கொண்டார்.

பாலஸ்​தீன அகதிகள் விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை முதலில் அறிந்த பின்னர் பொது அமைப்புகள் தங்கள் கருத்துகளை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related News