Jul 29, 2026
Thisaigal NewsYouTube
வேன் மோதி 5 வயது சிறுமி மரணம்
தற்போதைய செய்திகள்

வேன் மோதி 5 வயது சிறுமி மரணம்

Share:

தனது வீட்டின் முன்புறம் பிரதான சாலையில் பள்ளி வேன் ஒன்றினால் மோதப்பட்ட 5 வயது பாலர் பள்ளி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று காலை 11.35 மணியளவில் ஜோகூர், பண்டார் செரி அலாம், ஜாலான் சூரியா சாலையில் நிகழ்ந்தது. பள்ளி வேன் ஓட்டுநரான 50 வயது பெண், பாலர் பள்ளி முடிந்து தனது வேனில் 5 வயது சிறுமியையும், அவரின் 6 வயது அண்ணனையையும் வீட்டின் முன் புறம் வேனிலிருந்து கீழே .இறக்கி விட்டுள்ளார்.

வேனின் பின்புறத்தில் 6 வயது சிறுவன் நடப்பதைக் கண்ட அந்த வேன், ஓட்டுநர், தனது அண்ணனை பின்தொடர்ந்து அந்த ஐந்து வயது சிறுமியும் செல்கிறார் என்று நினைத்து வேனை செலுத்தத் தொடங்கினார்.

அப்போது ஏதோ ஒரு பொருள் முட்டுவதைப் போல் உணர்ந்த வேன் ஓட்டுநர், கீழே இறங்கி பார்த்தப் போது அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றதாக செரி அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சோஹைமி இஷாக் தெரிவித்தார்.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது