சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதைப் போல கிழக்குகரை மாநிலத்தின் மாவட்ட போலீஸ் நிலையத்தின் முன்புறம், அரசியல் கட்சி ஆதரவாளர் ஒருவர், போலீஸ்காரரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதை போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் உறுதிப்படுத்தினார். ஆத்திரமூட்டும் செயலின் காரணமாக இது நடந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதிகாலையில் நிகழ்ந்த இச்ச்மபவம் தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக அயோப் கான் குறிப்பிட்டார். அதேவேளையில் வாக்களிப்பு முடியும் வரையில் நடப்பு நிலை அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


