Sep 25, 2026
Thisaigal NewsYouTube
டாயா கெர்ஜாயா 2.0' திட்ட முறைகேடு: எஸ்பிஆர்எம் விசாரணைக்கு மனிதவள அமைச்சு முழு ஆதரவு
தற்போதைய செய்திகள்

டாயா கெர்ஜாயா 2.0' திட்ட முறைகேடு: எஸ்பிஆர்எம் விசாரணைக்கு மனிதவள அமைச்சு முழு ஆதரவு

Share:

‘டாயா கெர்ஜாயா 2.0’ திட்ட முறைகேடுகள் குறித்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணைக்கு மனிதவள அமைச்சு முழு ஆதரவை வழங்குவதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள், முன்னாள் கைதிகள் மற்றும் முதியோர்களின் வேலைவாய்ப்புக்காக உருவாக்கப்பட்ட இத்திட்டத்தில் பெர்கெசோவின் சொந்த 'மோசடி தடுப்பு பிரிவான ஏஎஃப்இஐ நடத்திய உள்ளூர் தரவு பகுப்பாய்வில் சந்தேகத்திற்குரிய முறைகேடுகள் கண்டறியப்பட்டன.. 2024 மற்றும் 2025-இல் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், பெர்கெசோவின் தலைமை நிர்வாக அதிகாரி உத்தரவின் பேரில் இவ்விளக்கம் எஸ்பிஆர்எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தும் நபர் அல்லது நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற கசிவுகளைத் தடுக்க கண்காணிப்பு வழிமுறைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Related News