Oct 17, 2026
Thisaigal NewsYouTube

கேங் கேஸ்டல் கும்பல் முறியடிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேங் கேஸ்டல் கும்பல் முறியடிப்பு

கோலாலம்பூர், நவ.9-


சட்டவிரோதக்குடியேறிகள், தங்களின் தாயாகத்திற்கு திரும்புவதற்கு ஒவ்வொருவரிடமும் சேவைக்கட்டணமாக 2,300 ரிங்கிட் வரையில் வசூல் செய்து வந்ததாக நம்பப்படும் கேங் கேஸ்டல் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

அண்மையில் சிலாங்கூரில் தஞ்சோங் காராங் மற்றும் ரவாங் ஆகிய பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு சோதனைகளில் இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் வளைத்துபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கையில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையக குற்றத்தடுப்பு பிரிவின் குடிநுழைவு மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவான டி3 நேரடியாக ஈடுபட்டது.

ஓப் பிந்தாஸ் நடவடிக்கையின் மூலம் சிலாங்கூர், தஞ்சோங் காராக், சுங்கை பகான் தெங்கோராக் கடப்பகுதியில் 0.5 கடல் மைல் தொலைவில் ஒரு படகில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இக்கும்பலின் ஒரு பகுதியினர் பிடிபட்டனர். மற்றொரு சோதனை ரவாங், குண்டாங்கில் மேற்கொள்ளப்பட்டதாக அவ்விலாகாவின் உதவி இயக்குநர் ஏசிபி சோபியான் சந்தோங் தெரிவித்துள்ளார். கடல் சார் போலீஸ் பிரிவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 39 இந்தோனேசியர்கள் பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →