Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மலேசியாவில் புதிய நவீன குடிநுழைவு முறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியாவில் புதிய நவீன குடிநுழைவு முறை

நவ. 24-

மலேசியாவில் புதிய நவீன குடிநுழைவு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தப் புதிய முறையானது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குடிநுழைவு சேவைகளை மேம்படுத்தும் என அத்துறையின் இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.

இந்த புதிய முறையின் முதல் கட்டம் 2026 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது முழுமையாக 2028இல் நிறைவு பெறும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், குடிநுழைவு சேவைகள் மேலும் ஆக்ககரமாகச் செயல்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குடிநுழைவு தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் இணைக்கும் முறையாகவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், சேவைகள் மிகவும் விரைவாகவும் துல்லியமாகவும் வழங்கப்படும் என்றார்.

இதன் மூலம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், பிற வெளிநாட்டினர் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் சேகரித்து பராமரிக்க முடியும். அதே சமயம், குடிநுழைவு சேவைகள் மேலும் பாதுகாப்பாகவும் இருக்கும் என Datuk Zakaria Shaaban குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →