அடுத்த வாரம் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களில் கிள்ளான், ஷா ஆலாம், கோலசிலாங்கூர் முதலிய பகுதிகளில் 99 இடங்களில் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாலான் புக்கிட் செராக்கா, பண்டார் புண்சாக் அலாம் மற்றும் கோலசிலாங்கூர் ஆகிய பகுதிகளில் உடைந்த குழாய்களை சீர்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என்று சிலாங்கூர் மாநில நீர் விநியோகிப்பு நிறுவனமான ஆயர் சிலாங்கூர் அறிவித்துள்ளது.
சீரமைப்பு பணிக்குப் பிறகு புதன்கிழமை குடிநீர் விநியோகம் முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


