புத்ராஜெயா, அக்டோபர்.09-
நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் வேளையில் இன்று பிற்பகலில் நிதி அமைச்சுக்கு வருகை புரிந்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பட்ஜெட் தயாரிப்புக்கான கடைசிக் கட்ட ஏற்பாடுகளை நேரில் கண்டறிந்தார்.
பிற்பகல் 3 மணியளவில் நிதி அமைச்சுக்கு வருகை புரிந்த டத்தோ ஶ்ரீ அன்வாரை, இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா, துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் மற்றும் கருவூலத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ ஜொஹான் மாஹ்மூட் மெரிகான் ஆகியோர் எதிர்கொண்டு வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டத்தோ ஶ்ரீ அன்வார், நாளைய தினம் 2026 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் சுமூகமாக நடைபெற வேண்டும் என்று தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டார்.








