28 வயது மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட மாற்றுதிரனாளியுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய 36 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர். பத்து காஜா காய்கறி தோட்டத்தில், மாலை 4 மணி அளவில் நடந்த இந்தச் சம்பவத்தின் போது, அந்த மாற்றுதிரனாளி ஆடவரை வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறிய 36 வயது ஆடவர், தகாத முறையில் உடலுறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்தியதாக பத்து காஜா வட்டார போலீஸ் தலைவர் எசிபி முகமட் ரோய் சுஹைமி சரிஃப் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை அந்த 36 வயது ஆடவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக 5 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதுடன் அந்த ஆடவரின் தொலைபேசி மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.








