Oct 4, 2026
Thisaigal NewsYouTube

கேபிள் திருட்டால் புத்ராஜெயா எம்ஆர்டி ரயில் சேவை பாதிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேபிள் திருட்டால் புத்ராஜெயா எம்ஆர்டி ரயில் சேவை பாதிப்பு

தாமான் ஏகுயின் எம்ஆர்டி நிலையம் அருகே கேபிள்கள் திருடப்பட்டதால் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு, புத்ராஜெயா எம்ஆர்டி இணைப்பு ரயில் சேவைகள் இன்று காலை பாதிக்கப்பட்டன.

இன்று அதிகாலை 5.25 மணியளவில் ரயில் ஒன்று இயங்க முடியாமல் நின்ற போது இச்சம்பவமானது கண்டறியப்பட்டது.

மேலும், மின்சார விநியோகத்தை சீரமைக்க தொழில்நுட்பக் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மாற்று ரயில் சேவைகளும் இலவச பேருந்து சேவைகளும் இயக்கப்பட்டுள்ளன.

இந்த சேவைகள் பாதிக்கப்பட்டதால், யுபிஎம், 16 சியேர்ரா மற்றும் புத்ராஜெயா சென்ட்ரல் நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த கேபிள் திருட்டு சம்பவத்தை ரெபிட் கேஎல் தீவிரமாகக் கருதுவதாக தெரிவித்துள்ளது.

பயணிகள் சமீபத்திய சேவை நிலவரங்களை ரெபிட் கேஎல் சமூக வலைத்தளங்கள் மற்றும் மைரெபிட் பல்ஸ் செயலி மூலம் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →