மாது ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வெல்டிங் பணியாளர் ஒருவர், இன்று தூக்குத் தண்டனையிலிருந்து தப்பினார்.
லின் சியெக் ஹோங் என்ற அந்த பணியாளருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், 35 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி ஹாடாரியா ஷெட் இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
54 வயதான லின் சியெக் ஹோங் என்ற அந்த நபர், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி காலை 6.45 மணியளவில் ரவாங், கம்போங் தெரெந்தாங்,லோரோங் தெங்ஙா என்ற இடத்தில் 41 வயது யாப் சூன் மோய் என்ற மாதுவை மார்பிலே கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக அந்நபருக்கு ஷா ஆலம், உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.








