புக்கிட் மெர்தாஜாம், அக்டோபர்.30-
கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி பினாங்கு, புக்கிட் மெர்தாஜம், ஜுரு, கம்போங் செகோலா ஜுருவில் உள்ள ஒரு வீட்டில் தாயும் மகளும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னணியில் பழிவாங்கும் செயல் இருந்துள்ளது என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸீ இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த இரட்டைக் கொலை தொடர்பில் மேலும் விவரங்களை வெளியிட மறுத்து விட்ட அவர், இதில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியச் சந்தேகப் பேர்வழி, ஒரு நேபாள் பிரஜையாவார். 35 வயது மதிக்கத்தக்க அந்த நபர், இந்த இரட்டைக் கொலைகளுக்குப் பின்னர் பிடிபடாமல் இருக்க சிலாங்கூருக்குத் தப்பி விட்டார். எனினும் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி அந்நிய ஆடவரைப் போலீசார் கைது செய்தனர் என்று அவர் விளக்கினார்.








