ஷா ஆலாம், மார்ச்.29-
ஷா ஆலாம், செக்ஷன் U15 பகுதியில் ஓடிக் கொண்டிருந்த காரின் மேற்கூரை வழியாகப் பட்டாசுகளைக் கொளுத்தி ஆபத்தான முறையில் விளையாடிய விவகாரத்தில், ஒரு பெண் உட்பட இருவரைப் காவற்படையினர் கைது செய்துள்ளனர். சுங்கை பூலோ, ஷா ஆலாம் பகுதிகளில் பிடிபட்ட 21 வயதும், 28 வயதும் கொண்ட அந்த நபர்களிடமிருந்து, சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட புரோட்டான் சத்ரியா காரும் பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஷா ஆலாம் மாவட்டக் காவற்படைத் தலைவர் ஏசிபி ரம்சே எம்போல் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் இது தொடர்பான காணொலி தீவிரமாகப் பகிரட்டதைத் தொடர்ந்து, நடவடிக்கை எடுத்துள்ள காவற்படை, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து அவர்களை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








