Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கேமரன்மலை – சிம்பாங் பூலாய் சாலை, இரவு நேர வாகனப் பயணத்திற்கு பொறுத்தமற்றது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேமரன்மலை – சிம்பாங் பூலாய் சாலை, இரவு நேர வாகனப் பயணத்திற்கு பொறுத்தமற்றது

கேமரன்மலை, நவ. 26-


நாட்டின் முக்கிய சுற்றுலா தலமான கேமரன் மலைக்கு செல்வதற்கு ஈப்போ வழியாக பயன்படுத்தப்படும் சிம்பாங் பூலாய் சாலை, இரவு நேர வாகனப் பயணத்திற்கு பொறுத்தமற்றது என்று வாகனமோட்டிகளுக்கு நினைவுறுத்தப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் கேமரன்மலை – சிம்பாங் பூலாய் சாலையை பயன்படுத்தப்படுவது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்ற கேமரன்மலை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான ரீச் கேட்டுக்கொண்டுள்ளது.

நிலச்சரிவு உட்பட பல்வேறு அபாயங்களை உள்ளடக்கிய அந்த சாலையை இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் நடப்பு முறை பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று ரீச் அமைப்பின் தலைவர் ஏ. திலீப் மார்டீன், பொதுப்பணி இலகாவை கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →