Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வர்த்தக குற்றச்செயல்களில் 22 போலீஸ் அதிகாரிகள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வர்த்தக குற்றச்செயல்களில் 22 போலீஸ் அதிகாரிகள்

கோலாலம்பூர், நவ. 15-


கடந்த ஆண்டில் அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த 22 அதிகாரிகள் வர்த்தக குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

அதேவேளையில் இவ்வாண்டில் வர்த்தக குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை உயர்ந்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

2023 இல் போலீஸ் படையைச் சேர்ந்த 22 போலீஸ் அதிகாரிகள் வர்த்தக குற்றச்செயகளில் சந்தேக நபர்களாக பார்க்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதம் வரையில் 23 பேராக உயர்ந்திருப்பதாக டான்ஸ்ரீ ரஸாருடின் குறிப்பிட்டார்.

இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் வர்த்தக குற்றத்தடுப்பு பிரிவின் மாதாந்திர பேரணி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஐஜிபி மேற்கண்டவாறு கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →