கடந்த வாரம் வியாழக்கிழமை சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறையின் பயணிகள் வருகைப்பகுதியில் சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ செரி தியொங் கிங் சிங் ரகளை புரிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவ்விடத்தில் குற்றத்தன்மை நிகழ்ந்துள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிவதற்கு விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.
இந்த ரகளை சம்பவத்தில் யார் தவறு இழைத்துள்ளார்கள் என்பதை கண்டறிவதற்கு இந்த விசாரணை அவசியமாகிறது என்று ஹுசெயின் ஒமார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணையில் எந்தவொரு தரப்பினரையும் அழைப்பதற்கு போலீசாருக்கு அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மத்தியில் நிலவி வருவதாக கூறப்படும் லஞ்ச ஊழல் செயலை கண்காணிப்பதற்காக தாம் விமான நிலையத்திற்கு சென்ற போது, குடிநுழைவு அதிகாரிகள், சீன நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து தாம் குரல் எழுப்பியதாக சுற்றுலா அமைச்சர் தியொங் கிங் சிங் தமது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


