கோலாலம்பூர், செப்டம்பர்.03-
வங்காளதேசப் பிரஜைகள் மூளையாக இருந்து செயல்பட்ட போலி ஆவணங்களைத் தயாரிக்கும் கும்பல் ஒன்றைக் குடிநுழைவுத்துறையினர் முறியடித்துள்ளனர்.
கோலாலம்பூர் மாநகரில் நேற்று காலை 9.40 மணியளவில் இரண்டு வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக உளவுத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வந்த இந்தக் கும்பல் முறியடிக்கப்பட்டது மூலம் அந்நிய நாட்டவர்களுக்கு போலி ஆவணங்களைத் தயாரிப்பதில் மூளையாக இருந்து செயல்பட்டு வந்த 19 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐந்து வங்காளதேசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸாகாரியா ஷாபான் குறிப்பிட்டார்.
குடிநுழைவுத்துறையின் தற்காலிக வேலை பெர்மிட்டுகளை இந்தக் கும்பல் போலியாகத் தயாரித்து வந்துள்ளதாக அவர் விளக்கினார்.








