Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அரசியல் கட்சிகளின் பெரும் தலைகள் உருளலாம்
தற்போதைய செய்திகள்

அரசியல் கட்சிகளின் பெரும் தலைகள் உருளலாம்

Share:

இன்றைய 6 மாநிலங்களுக்கான தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனலின் பெரும்தலைகள், உருளலாம் என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் ​நூர் ஆருடம் கூறியுள்ளார். கடந்த 12 நாட்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தை அடிப்டையாக கொண்டு அந்த கூட்​டணியின் முக்கியத் தலைவர்கள் தோல்விக் காணலாம் என்று பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநருமான சனூசி குறிப்பிட்டார். பல​ம் பொருந்திய வேட்பாளர்கள் பலரை பெ​ரிக்காத்தான் நேஷனல் தவிடுப்பொடியாக்கவிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எங்கும் பெரிக்காத்தான் நேஷனல் அலை ஏற்பட்டுள்ளதாக சனூசி குறிப்பிட்டுள்ளார்.

Related News