Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மாணவர் போராட்டம் உச்சம்: பிரதமர் ஹஷினா ராஜினாமா
தற்போதைய செய்திகள்

மாணவர் போராட்டம் உச்சம்: பிரதமர் ஹஷினா ராஜினாமா

Share:

டாக்கா, ஆகஸ்ட் 05-

வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டுப் பிரதமர ஷேக் ஹசீனா இன்று திங்கட்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தெற்காசிய நாடுகளில் 50 ஆண்டு கால சுதந்திர வங்காளதேசத்தில் முதல் முறையாக அதிகமானோர் பலியான வரலாறு காணாத மாணவர் போராட்டத்தின் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு, அந்த நாட்டை விட்டே வெளியேறியுள்ளார்.

ஷேக் ஹசீனா, தனது சகோதரியுடன் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா தலைநகர் அகர்தலா- வை நோக்கி தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

மாணவர் போராட்டத்தில் இதுவரையில் 100 பேர் உயிரிழந்தைத் தொடர்ந்து அந்நாட்டில் நிலைமை மோசமாகியுள்ளது.

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

76 வயதான ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், இடைக்கால அரசு அமைக்கப்படும் என்றும் இராணுவ தளபதி வேக்கர் - உஸ் ஜமான் தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை