Dec 5, 2025
Thisaigal NewsYouTube
தியோ பெங் ஹோக்கின் குடும்பத்தினரிடம் அஸாம் பாக்கி மன்னிப்பு கோரினார்
தற்போதைய செய்திகள்

தியோ பெங் ஹோக்கின் குடும்பத்தினரிடம் அஸாம் பாக்கி மன்னிப்பு கோரினார்

Share:

கோலாலம்பூர், ஜூலை.16-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், இன்று முதல் முறையாக, மறைந்த தியோ பெங் ஹோக்கின் குடும்பத்தினரிடம் பகிரங்க மன்னிப்பு கோரியது.

மறைந்த தியோ பெங் ஹோக்கின் குடும்பத்திற்கு ஒரு கருணைத் தொகையை வழங்கவும் எஸ்பிஆர்எம் தயாராக உள்ளது. இந்த கருணைத் தொகை, மறைந்த தியோ பெங் குழந்தையின் நலன் மற்றும் கல்விச் செலவுகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

தியோ பெங் நோக்கி மரணம் தொடர்பில் ஆகக் கடைசியாக நடந்த விசாரணையில், எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் எந்தவொரு தனிநபரும் குற்றம் இழைத்தற்கானப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் தியோ பெங் ஹோக்கின் மரணச் சம்பவத்தை எஸ்பிஆர்எம் இன்னமும் கடுமையாகக் கருதி வருகிறது என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

லஞ்ச ஊழல் தொடர்பான விசாரணைக்காக அழைக்கப்பட்ட அரசியல்வாதியின் உதவியாளரான தியோ பெங் ஹோக், கடந்த 2009 ஆம் ஆண்டு ஜுலை 16 ஆம் தேதி எஸ்பிஆர்எம்மின் சிலாங்கூர் மாநிலக் கட்டட வளாகத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தியோ பெங் ஹோக்கின் குடும்பத்தினர் நீதி கேட்டு, கடந்த 16 ஆண்டு காலமாகப் போராடி வருகின்றனர்.

Related News