Jul 1, 2026
Thisaigal NewsYouTube
சோதனைகள் கடந்து சாதனைகள் படைப்போம்: டத்தோ அ. சிவநேசனின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
தற்போதைய செய்திகள்

சோதனைகள் கடந்து சாதனைகள் படைப்போம்: டத்தோ அ. சிவநேசனின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Share:

நாட்டில் இந்து ஆலயங்கள் தொடர்பான பல்வேறு சவால்கள் எழுந்துள்ள இந்தச் சூழலில், பிறக்கவிருக்கும் சித்திரைப் புத்தாண்டு நம் அனைவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தர வேண்டும் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பேரா மாநில அளவில் , முருகன் மாநாட்டை ஏற்று நடத்திய நிலையில் இந்த ஆண்டு வரும் ஜுலை மாதம் மலேசியா ரீதியாக முருகன் மாநாட்டை பேரா மாநில அரசு நடத்தவிருப்பதாக டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.

கடந்த காலச் சோதனைகளைத் தாண்டி, பேரா மாநில அரசின் சார்பில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான முருகன் மாநாடு போன்ற முன்னெடுப்புகள் நமது சமயப் பண்பாட்டு வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை டத்தோ அ. சிவநேசன் தமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related News