தமது காதலை முறித்து கொள்வதாக மாது ஒருவர் தெரிவித்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியாத ஆடவர் ஒருவர், அந்த மாதுவை கத்தியால் சரமாரியாக வெட்டினார்.
இச்சம்பவம் அம்பாங், புக்கிட் அந்தாராபங்சா அடுக்குமாடி வீடமைப்பு பகுதியில் கார் நிறுத்தும் இடத்தில் நிகழ்ந்தது.
காரில் அமர்ந்திருந்த 45 வயதுடைய மாதுவின் கார் டயரை கத்தியால் வெட்டிய அந்த நபர், பின்னர் காரின் முன்கண்ணாடியை அடித்து துவம்சம் செய்துள்ளார். இதைப் பார்த்து பயந்து போன அந்த மாது காரின் கதவை திறந்து தப்பித்து ஓடிய போது அவரை துரத்திச் சென்று கத்தியால் சரமாரியாக வெட்டியதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஆசம் இஸ்மாயில் தெரிவித்தார்.
வயிறு, இடதுக்கை, தோள்ப்பட்டை ஆகிய பகுதிகளில் கடும் காயங்களுக்கு ஆளான அந்த மாது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் அந்த மாதுவின் காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக ஆசம் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


