Dec 3, 2025
Thisaigal NewsYouTube
'மலேசியா மடானி' என்றால் என்ன? மக்களுக்குப் புரிய வைப்பதில் சிக்கல்!
தற்போதைய செய்திகள்

'மலேசியா மடானி' என்றால் என்ன? மக்களுக்குப் புரிய வைப்பதில் சிக்கல்!

Share:

கிள்ளான், செப்டம்பர்.21-

மக்களின் பேராதரவைப் பெற்றாலும், பிரதமரின் மலேசியா மடானி திட்டத்தின் உண்மையான நோக்கம் மக்களுக்கு முழுமையாகப் புரியவில்லை என சமூகத் தொடர்புத் துறை ஜே-கோம் ஒப்புக் கொண்டுள்ளது. "மக்களுக்குப் பிரதமர் வழங்கும் உதவிகளான ரஹ்மா விற்பனை, சாரா உதவித் தொகை போன்ற திட்டங்கள் தெரிகின்றன. ஆனால், இந்தத் திட்டங்களுக்குப் பின்னால் உள்ள 'மலேசியா மடானி'யின் ஆழமான சிந்தனை மக்களுக்கு இன்னும் புரியவில்லை" என்று கவலையுடன் தெரிவித்தார் சமூகத் தொடர்புத் துறையின் தலைவர், இஸ்மாயில் யூசோஃப்.

எனவே, மக்கள் மத்தியில் நேரடியாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தப் புதிய அணுகுமுறையைக் கையாளப் போவதாக ஜே-கோம் அறிவித்துள்ளது.

Related News