May 7, 2026
Thisaigal NewsYouTube
ஆயுதப்படை இரகசியத் தகவல்கள் கசிந்தது தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன: சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - தற்காப்பு அமைச்சர் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

ஆயுதப்படை இரகசியத் தகவல்கள் கசிந்தது தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன: சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - தற்காப்பு அமைச்சர் எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.16-

ஆயுதப்படைகள் தொடர்பான இரகசிய தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

இவ்விசாரணைகளை தற்காப்பு அமைச்சு நடத்தவில்லை என்றும், போலீசார் நடத்தி வருவதாகவும் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஒன்றில் காலிட் நோர்டின் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், ஆயுதப்படைகளின் வியூக விவகாரங்கள் தொடர்பான இரகசியத் தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பும் எந்த ஒரு தரப்பினர் மீதும் கடுமையான சட்ட நடிவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது 1972 ஆம் ஆண்டு, அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம், 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், 1972 ஆம் ஆண்டு ஆயுதப்படைச் சட்டம் அல்லது 1993 ஆம் ஆண்டு பொது அதிகாரிகள் (நடத்தை மற்றும் ஒழுக்கம்) விதிமுறைகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் எடுக்கப்படவுள்ளது.

மேலும், ஆயுதப்படை அதிகாரிகளின் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளானது மலேசிய மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்பதோடு, ஆயுதப்படை மன்றத்தின் ஆலோசனையின் பேரில் அவை முடிவெடுக்கப்படும் என்றும் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

Related News

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினர் 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினர் 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர்

நெகிரி செம்பிலானில் எந்த நேரத்திலும் தீடீர் தேர்தல் அறிவிக்கப்படலாம் / தயாராக இருக்குமாறு ஆதரவாளர்களுக்கு மந்திரி பெசார் அமினுடின் வேண்டுகோள்

நெகிரி செம்பிலானில் எந்த நேரத்திலும் தீடீர் தேர்தல் அறிவிக்கப்படலாம் / தயாராக இருக்குமாறு ஆதரவாளர்களுக்கு மந்திரி பெசார் அமினுடின் வேண்டுகோள்

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகின்றதா? - மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் காசி மறுப்பு

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகின்றதா? - மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் காசி மறுப்பு

சாஹிட் தொடர்பான டிஎன்ஏஏ விவகாரம்: வழக்கறிஞர் மன்றத்திற்கு சாதகமாக அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு

சாஹிட் தொடர்பான டிஎன்ஏஏ விவகாரம்: வழக்கறிஞர் மன்றத்திற்கு சாதகமாக அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு

மலாக்கா சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை: 5 பிக்பாக்கெட் திருடர்கள் கைது

மலாக்கா சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை: 5 பிக்பாக்கெட் திருடர்கள் கைது

மாமன்னரின் ரஷ்ய பயணம்: 'விக்டரி டே' கொண்டாட்டங்களில் பங்கேற்க மாஸ்கோ சென்றடைந்தார்

மாமன்னரின் ரஷ்ய பயணம்: 'விக்டரி டே' கொண்டாட்டங்களில் பங்கேற்க மாஸ்கோ சென்றடைந்தார்