Apr 14, 2026
Thisaigal NewsYouTube
கேஎல்ஐஏ விமான நிலையப் பகுதிகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏ விமான நிலையப் பகுதிகளில் 5 மில்லியனுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையமான KLIA மற்றும் சிப்பாங் பகுதிகளில் சமீபத்தில் நடத்தப்பட்ட பல போலீஸ் சோதனைகளில் 5.45 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 82 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம் பல சர்வதேச போதைப்பொருள் கும்பல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

முதல் சம்பவமாக கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி KLIA அருகிலுள்ள ஒரு வணிக வளாக வாகன நிறுத்துமிடத்தில் 19 வயதுடைய விற்பனைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்துள்ளார்.

அந்த உள்ளூர் பெண்ணிடம் இருந்து 12 பிளாஸ்டிக் பொதிகளில் வைத்திருந்த சுமார் 12.5 கிலோ syabu போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதன் மதிப்பு சுமார் 6 லட்சத்து 25 ஆயிரம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது சம்பவமாக, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி KLIA முனையம் 1-ல் நடத்தப்பட்ட சோதனையில் மூன்று பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 90 பிளாஸ்டிக் பொதிகளில் 45 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மதிப்பு 3.6 மில்லியன் ரிங்கிட் என கூறப்படுகின்றது.

இதனிடையே, KLIA முனையம் 1-ல், கண்டெடுக்கப்பட்ட பெட்டி ஒன்றில் 1.225 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

KTMB பயணிகளுக்கு 30 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி / ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு

KTMB பயணிகளுக்கு 30 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி / ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு

போக்குவரத்து போலீஸ்காரரை காரால் மோதிவிட்டு தப்பியோடிய அதிகாரி கைது

போக்குவரத்து போலீஸ்காரரை காரால் மோதிவிட்டு தப்பியோடிய அதிகாரி கைது

அரசு ஊழியர்கள் கஞ்சா வளர்க்க வேண்டும் என்று கூறும் போலி புகைப்படம் - அமைச்சர் கடும் கண்டனம்

அரசு ஊழியர்கள் கஞ்சா வளர்க்க வேண்டும் என்று கூறும் போலி புகைப்படம் - அமைச்சர் கடும் கண்டனம்

ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே எதிர்காலத்தின் அடித்தளம்: இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் புத்தாண்டு செய்தி

ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே எதிர்காலத்தின் அடித்தளம்: இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் புத்தாண்டு செய்தி

ஸ்குவாஷ் மைதானம் அமைப்பதில் 1 மில்லியன் லஞ்ச ஊழல்: தலைமை செயலதிகாரி கைது

ஸ்குவாஷ் மைதானம் அமைப்பதில் 1 மில்லியன் லஞ்ச ஊழல்: தலைமை செயலதிகாரி கைது

மேற்காசிய சூழலை வைத்து அரசியல் லாபம் பார்க்கக் கூடாது - தலைவர்களுக்கு பேராக் சுல்தான் அறிவுறுத்தல்

மேற்காசிய சூழலை வைத்து அரசியல் லாபம் பார்க்கக் கூடாது - தலைவர்களுக்கு பேராக் சுல்தான் அறிவுறுத்தல்