கோலாலம்பூர், நவம்பர்.11-
நேற்று செர்டாங், ஶ்ரீ கெம்பாங்கான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடிநுழைவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, போலி குடிநுழைவுப் பாதுகாப்பு முத்திரைகளை விற்பனை செய்து வந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வியட்நாம், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து பிரஜைகள் மலேசியாவில் நீண்ட நாட்கள் தங்குவதற்காக இந்த போலி முத்திரைகளை அவர்கள் விற்று வந்ததாக குடிநுழைவுத் துறை தலைவர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
இது போன்ற போலி முத்திரைகளைப் பயன்படுத்த அவர்கள் 2,500 ரிங்கிட் முதல் 3000 ரிங்கிட் வரையில் பெற்று வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள அவர்கள் 7 பேரும் குடிநுழைவுச் சட்டம் 1959/63- கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.








