Jun 30, 2026
Thisaigal NewsYouTube
"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை
தற்போதைய செய்திகள்

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

Share:

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் தாம் பதவி விலகியதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை முற்றிலும் மறுத்துள்ளார்.

அந்தத் தகவல்கள் “முற்றிலும் பொய்யானவை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையில், கட்சியின் தலைமைத்துவ அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பரவிய தகவல்கள் குறித்து விளக்கமளித்தார்.

தற்போதைய தலைமை அமைப்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும், தாம் தொடர்ந்து தனது பொறுப்பில் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்சியினரின் நம்பிக்கையையும் ஜனநாயக நடைமுறைகளையும் மதித்து, தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை தொடர்ந்து நிறைவேற்றவுள்ளதாகவும் நூருல் இசா உறுதியளித்துள்ளார்.

மேலும், கட்சியின் அடிப்படை கொள்கைகளை வலுப்படுத்துவதில் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News