Oct 6, 2026
Thisaigal NewsYouTube

குழந்தைகளைக் குறிவைக்கும் செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு பாதுகாப்பு விதிகள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குழந்தைகளைக் குறிவைக்கும் செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு பாதுகாப்பு விதிகள்

குழந்தைகளை இலக்காகக் கொண்டு உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவான ஏஐ செயலிகள் மற்றும் உரையாடல் மென்பொருட்களில் பாதுகாப்பு அம்சங்களைக் கட்டாயமாக இணைக்க புதிய சட்டம் வழிவகுக்கும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர், உருவாக்கப்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவு ஆளுமை சட்டமூலம், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உளவியல் பாதிப்புகள் உள்ளிட்ட அபாயங்களை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இருக்கும் என்றார். இதில் வழக்கமான அபாய மதிப்பீடுகள் நடத்துவதுடன், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை வடிகட்டுவதும் அடங்கும்.

செயற்கை நுண்ணறிவு செயலியுடன் மனிதர் அல்ல, செயற்கை நுண்ணறிவு அமைப்புடன் தொடர்பு கொள்கிறோம் என்பதை பயனர்களுக்குத் தெரிவிப்பதும் படிப்படியாக கட்டாயமாக்கப்படும். குறிப்பாக அதிக அபாயம் கொண்ட செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு தெளிவான அறிவிப்பு இடம்பெற வேண்டும் என்றும் கோபிந்த் சிங் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு ஆளுமை சட்டமூலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →