Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஈரானை விட்டு மலேசியர்கள் வெளியேற வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஈரானை விட்டு மலேசியர்கள் வெளியேற வேண்டும்

கோலாலம்பூர், ஜூன்.17-

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து ஈரானில் பதட்ட நிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஈரானில் உள்ள மலேசியர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறும்படி விஸ்மா புத்ரா இன்று அறிவுறுத்தியுள்ளது.

அந்த நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறக்கூடிய எந்த வழியாக இருந்தாலும் அதன் வாயிலாக மலேசியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று விஸ்மா புத்ரா கேட்டுக் கொண்டுள்ளது.

அதே வேளையில் ஈரானின் பாதுகாப்பு குறித்து தலைநகர் தெஹ்ரானில் உள்ள மலேசியத் தூதரகம் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக விஸ்மா புத்ரா குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →