ஜோகூர் பாரு, செப்டம்பர்.24-
ஜோகூர், மூவார் பெர்ரி முனையம், பாசீர் கூடாங் பெர்ரி முனையம் மற்றும் மலாக்கா பெர்ரி முனையம் ஆகியவற்றின் சோதனைச் சாவடி மையங்களில் பணியாற்றும் 7 அமலாக்க அதிகாரிகள் உட்பட 12 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
செட்டிங் முகப்பிடங்களை அமைத்து பெர்ரி மூலம் வந்திறங்கும் இந்தோனேசியர்களைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைவதற்கு லஞ்சம் பெற்று வந்ததாகக் கூறப்படும் 7 அதிகாரிகள் உட்பட 12 பேர் பிடிபட்டுள்ளனர்.
விசாரணைக்கு ஏதுவாக அந்த 12 பேரும் ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவல் அனுமதியை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.








