கடந்த 2020-ஆம் ஆண்டு வடக்கு–தெற்கு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இரு உயிரிழப்பிற்குக் காரணமான விபத்தில், பாதசாரி வி. செல்வராஜ் தான் விபத்திற்கு 100 சதவீதம் காரணம் என்ற முந்தைய செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை, ஈப்போ உயர்நீதிமன்றம் இன்று மறு உறுதி செய்தது.
இதனையடுத்து, செல்வராஜின் குடும்பம் தாக்கல் செய்த மேல்முறையீடுகள் இரண்டையும் நீதிபதி மோசஸ் சுசயன் தள்ளுபடி செய்தார்.
அதேவேளையில், உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ரிசுவான் அசாஹரியின் குடும்பத்திற்கு 4 லட்சத்து 25,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவையும் உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
இருப்பினும், செல்வராஜின் மனைவி கே. லட்சுமியின் நிதிச் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, அவருக்கு எதிராக நீதிமன்றச் செலவுத் தொகையை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








