பேரா விளையாட்டு வீரர்களுக்கான ஊக்குவிப்புத் தொகை 50 வெள்ளி முதல் 100 வெள்ளி வரை அதிகரிக்கப்பட உள்ளது என்று மாநில கல்வி, உயர்கல்வி, இளைஞர், விளையாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் கைருடின் அபு ஹனிபா கூறினார்.
பேரா மாநில விளையாட்டு மன்ற நிர்வாகக் குழுவின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, கடந்த அக்டோபர் மாதத்தில் புதிய ஊக்குவிப்புத் தொகை நடப்புக்கு வந்ததாக அவர் கூறினார்.
முழு நேர விளையாட்டாளர்களுக்கு 200 வெள்ளியில் இருந்து 250 வெள்ளிக்கும் வெற்றி பெற்ற அல்லது பெறக்கூடிய ஆற்றலும் திறமையும் கொண்ட விளையாட்டாளர்களுக்கு 150 வெள்ளியில் இருந்து 250 வெள்ளிக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
podium Perak திட்டத்தில் பங்கெடுக்கும் விளையாட்டாளர்களுக்கு 550 வெள்ளியில் இருந்து 650 வெள்ளி முதல் 700 வெள்ளி வரை அதிகரிக்கப்பட உள்ளது. அதே சமயத்தில், அத்திட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் 350 வெள்ளியைப் பெற்றவர்கள் இனி 450 வெள்ளி முதக் 500 வெள்ளி வரை பெறுவார்கள் எனவும் கைருடின் தெரிவித்தார்.








