Oct 16, 2026
Thisaigal NewsYouTube

போக்குவரத்து நிறுவனங்களுக்குப் போக்குவரத்து அமைச்சு அறிவுறுத்தியுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போக்குவரத்து நிறுவனங்களுக்குப் போக்குவரத்து அமைச்சு அறிவுறுத்தியுள்ளது

டிச.6-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுக்கானப் பணத்தை திரும்பப் பெறுவதற்கு அல்லது வேறு தேதியில் பயணத்தை மேற்கொள்ள வசதி செய்ய வேண்டும் என்று போக்குவரத்து நிறுவனங்களுக்குப் போக்குவரத்து அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பேருந்து நிறுவனங்கள் வெள்ள பாதிப்பு இல்லாத பகுதிகளுக்கு செல்லும் மாற்று வழிகளை தேர்வு செய்ய வேண்டும். இரயில் சேவையை நடத்தும் KTMB நிறுவனம், பாதிக்கப்பட்டப் பயணிகளுக்கு ஏழு நாட்களுக்குள் பயணச்சீட்டுக்கானப் பணத்தை திரும்பத் தர ஆவண் செய்தாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வெள்ள பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்து நிறுவனங்கள், அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →