May 24, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் நுழைவுப் பகுதிகளில் கண்காணிப்பு வலுப்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

நாட்டின் நுழைவுப் பகுதிகளில் கண்காணிப்பு வலுப்படுத்தப்படும்

Share:

புத்ரஜயா,ஆகஸ்ட் 18

குரங்கம்மை எனப்படும் MPOX தொற்று மலேசியாவில் பரவுவதைத் தவிர்க்க நாட்டின் அனைத்து சர்வதேச நுழைவுப் பகுதிகளிலும் கண்காணிப்பையும் பாதுகாப்பையும் வலுப்படுத்த சுகாதார அமைச்சு தயாராக உள்ளது.

அதுமட்டுமின்றி, MPOX தொற்று உள்ள நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும், மலேசியாவிற்கு வந்த நாளிலிருந்து, 21 நாட்களுக்கு MPOX நோய்த்தொற்றின் அறிகுறிகள் உட்பட தங்கள் உடல்நிலையை தினமும் கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை, தோலில் சொறி அல்லது கொப்பளங்கள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்குச் சென்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News