தஞ்சோங் மாலிமில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் வயோதிக தம்பதியரிடம் கொள்ளையடித்த நான்கு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி அதிகாலை 3.15 மணியளவில் தாமான் செந்தோசாவில் உள்ள கடை வீடொன்றில் நுழைந்த 4 முகமூடி கொள்ளையர்கள், அந்த மூத்தத் தம்பதியரை மடக்கி கொள்ளையடிக்கும் காட்சியைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதாக முவாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் ஹஸ்னி முஹமாட் நாசிர் தெரிவித்தார்.
கத்தியையும் பாராங்கையும் ஆயுதமாக கொண்ட அந்த சந்தேகப்பேர்வழிகள் ரோலர் ஷட்டர்கள் வாயிலாக கடைக்குள் நுழைந்து, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த 70 மற்றும் 66 வயது மதிக்கத்தக்க வயோதிக தம்பதியரை மடக்கி, விலை உயர்ந்தப் பொருட்களை கொள்ளையிட்டு சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஹஸ்னி முஹமாட் நாசிர் குறிப்பிட்டார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


