ஷா ஆலாம், டிசம்பர்.20-
ஷா ஆலாமில் இரண்டு இந்தோனேசியப் பணிப் பெண்களைக் கட்டாய உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு உள்ளாக்கிய புகாரின் பேரில் ஒரு பெண் தொழிலதிபர் மற்றும் அவரது மகள் ஆகியோரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஷா ஆலாமில் உள்ள கயாங்கான் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த வியாழக்கிழமை மதியம் 2. 30 மணியளவில் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ரம்செய் எம்போல் தெரிவித்தார்.
இந்தச் சோதனையின் போது 48 மற்றும் 33 வயதுடைய இரண்டு இந்தோனேசிய வீட்டுப் பணியாளர்கள் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தில் அந்த இரு பணிப் பெண்களின் முதலாளிகளான 50 மற்றும் 30 வயதுகளில் உள்ள ஒரு பெண் தொழிலதிபர் மற்றும் அவரது மகள் கைது செய்யப்பட்டதாக ரம்செய் எம்போல் தெரிவித்தார்.








