கோத்தா பாரு, ஆகஸ்ட்.05-
தனது 16 வயது வளர்ப்பு மகளைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக 49 வயது தந்தை ஒருவர், கோத்தா பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
நீதிபதி ஸுல்கிஃப்லி அபிலா முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த நபருக்கு எதிராக 6 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
ஒரு கிடங்குப் பணியாளரான அந்த நபர், கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் கோத்தா பாரு, பாடாங் என்ற இடத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








