கோலாலம்பூர் ஜாலான் புக்கிட் பிந்தாங்கில் உள்ள பேரங்காடி மையம் ஒன்று , தனது ஆண்டு விழாவையொட்டி மேற்காசிய கவர்ச்சி நடனமான பெல்லி நடன நிகழ்வை பொதுவில் நடத்தியதற்காக அந்த பேரங்காடி மையத்தை தற்காலிகாமக மூடுவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. அரைகுறை ஆடையில் இளம் நங்கையர்களின் இடையாட்டம், சமுக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து அந்த பேரங்காடி மையம், தனது வர்த்தக அனுமதிக்கான நிபந்தனைகளை மீறிவிட்டதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஜுலை 5 ஆம் தேதி நடைபெற்ற இந்த பெல்லி நடன நிகழ்வு, அப்பகுதி மக்களை முகசுளிப்பில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


