பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.29-
அண்மையில் சபா பெர்னாமில் உள்ள விடுதிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து படிவம் 3 மாணவர் விழுந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவலை சிலாங்கூர் காவல்துறை மறுத்துள்ளது.
இது குறித்து சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் கூறுகையில், “இந்த அறிக்கை தவறானது அது எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை மற்றொரு வழக்காக இருக்கலாம்," என்று அவர் கூறியதாக அஸ்ட்ரோ அவானி செய்தி கூறுகின்றது. எனினும், இவ்வழக்கு விசாரணையில், நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஷாஸெலி கூறியிருக்கிறார்.
இதனிடையே, முன்னதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி, இவ்வழக்கில் விசாரணைகளுக்கு உதவ 12 நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








